Tuesday, November 16, 2010

குருவே சரணம்...

குருவே சரணம்...

உலகமெல்லாம் ஓடி, உனைத்தேடி நான் ஏங்கவோ
உயிருக்குள்ளே ஜோதி, விழி மூடி அதைப் பார்க்கவோ
உனைப்பாட மொழியுமில்லை, உனைக்காண  விழியுமில்லை
இறைவன் அருளே, உனதடி சரணமே அடைந்துவிடவோ, கலந்துவிடவோ, நினைந்துவிடவோ ?

குருவே சரணம், குருவே சரணம்!

நதியிலோர் படகிலே, துடுப்பினால் பயணமே, நதியும் உனதே, படகும் உனதே, மனமறியுமோ?

பிறவி தரும் வினைகளே, வினைகள் தரும் பயன்களே, குருவினருளே வினைகள் தீர்க்கும்...விதிபுரியுமோ?

மறுமையும் இம்மையும் உனதில், இதில் இன்பமும் துன்பமும் மனதிலே...

பிறப்பதும் பிரிவும் முடிந்து போய்விட எனதுயிர் உன்பதம் சேருமோ?

ஆதியந்தமான எந்தன் இறைவா, குருவே சரணம்!

உலகமெல்லாம் ஓடி, உனைத்தேடி நான் ஏங்கவோ
உயிருக்குள்ளே ஜோதி, விழி மூடி அதைப் பார்க்கவோ
உனைப்பாட மொழியுமில்லை, உனைக்காண விழியுமில்லை
இறைவன் அருளே, உனதடி சரணமே அடைந்துவிடவோ, கலந்துவிடவோ, நினைந்துவிடவோ ?

குருவே சரணம், குருவே சரணம்!

No comments:

Post a Comment